பைக்கில் இருந்து தவறி விழுந்த பெண் சாவு
நெல்லை, அக். 10: உவரி அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.உவரி அருகே சொக்கலிங்கபுரம் மேற்கு தெருவை சேர்ந்தவர் ஆறுமுக கனி(53). கடந்த 4ம் தேதி தனது மகன் முருகனுடன் ஆறுமுக கனி பைக்கில் சென்று கொண்டிருந்தார். சொக்கலிங்கபுரம் பஸ்நிறுத்தம் அருகே பைக் சென்ற போது எதிர்பாராதவிதமாக ஆறுமுக கனி பைக்கில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் ஆறுமுக கனி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து உவரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Advertisement
Advertisement