தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

விதி மீறும் வாகன ஓட்டிகளால் விபத்து அபாயம் மேம்பாலங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படுமா?

 

மதுரை, ஜூலை 2: விபத்துகளை ஏற்படுத்தும் விதமாக மேம்பாலங்களில் அதி வேகத்திலும், ஒருவழிப்பாதையிலும் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக சிசிடிவி கேமராக்கள் பொருத்த முன்வர வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. மதுரையின் மாநகரின் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் விதமாக, சாலை விரிவாக்கம் மற்றும் புதிய மேம்பாலங்கள் கட்டுவது உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளை நெடுஞ்சாலைத்துறை செய்து வருகிறது.

இதன்படி, ராமேஸ்வரம் - கொச்சி சாலையில் மதுரை - தேனி மார்க்கத்தில் முடக்குச் சாலை சந்திப்பில் ரூ.53 கோடியில் புதிதாக நான்கு வழிச்சாலையுடன் கூடிய இருவழித்தடம் கொண்ட மேம்பாலமும், தத்தனேரி மேம்பாலத்தில் ரூ.9.50 கோடியில் ஒரு வழித்தடம் கொண்ட இணைப்பு பாலமும் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. எனினும், இந்த பாலங்களில் வாகன ஓட்டிகள் எதிரெதிர் திசையில் வருவது, அதிவேகத்தில் செல்வது உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபடுகின்றனர்.

இதனால், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுவதுடன், வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் காயமடைகின்றனர்.போக்குவரத்து போலீசார் தரப்பில் எச்சரிக்கை பலகைகள் வைத்தும் பலனில்லை. எனவே, இரண்டு பாலங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி விபத்துக்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

Related News