தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

செங்கல்பட்டு பாலாற்றில் மெய்யூர்-பழவேலி இடையே தடுப்பணை அமைக்கப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு

மாமண்டூர், ஜூலை 9: செங்கல்பட்டு பாலாற்றில் மெய்யூர்-பழவேலி இடையே தடுப்பணை அமைக்க வேண்டும் என விவசாயிகள் நீண்ட வருடங்களாக பெரும் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தடுப்பணை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர். தென் இந்தியா விவசாயத்தின் தாய் ஆறாக விவசாயிகளால் செல்லப்படும் பாலாறு, கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்திலுள்ள நந்தி மலையில் உற்பத்தியாகி ஆந்திரா வழியாக தமிழ்நாட்டுக்குள் நுழைகிறது. இந்த பாலாறு, கர்நாடகாவில் 93 கிமீ தொலைவு, ஆந்திராவில் 33 கி.மீ., தூரம் பாய்ந்து, வாணியம்படி அருகே புல்லூர் என்ற இடத்தில் தமிழ்நாட்டிற்குள் நுழைகிறது.

தமிழ்நாட்டில்தான் அதிக அளவாக 222 கி.மீ., தூரம் பயணித்து செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகேயுள்ள வாயலூர் என்ற இடத்தில் வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது. தமிழ்நாட்டின் வட மாவட்டங்களான வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு ஆகியவை பாலாற்றினால் பயன்பெறுகின்றன. பாலாறு ஆண்டு முழுவதும் நீர் ஓடும் வற்றாத ஆறு. இது, பருவ காலங்களில் பெய்யும் மழையே இதன் நீர் ஆதாரம் ஆகும். இதனால், விவசாயம், குடிநீர் ஆகியவற்றுக்கான முக்கிய ஆதாரமாக பாலாறு திகழ்கிறது.

இந்நிலையில், செங்கல்பட்டு பகுதியில் உள்ள பாலாற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் என விவசாயிகள் ஆர்ப்பாட்டம், போராட்டம், உண்ணாவிரதம் நடத்தியும், அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 50 ஆண்டுகால கோரிக்கை தற்போது வரை நிறைவேற்றப்படாமல் உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தை பொருத்தவரை திருக்கழுகுன்றம் அருகே வள்ளிபுரம், கல்பாக்கம் அருகே வாயலூர் ஆகிய இரண்டு இடங்களில் மட்டுமே தடுப்பணை உள்ளது. செங்கல்பட்டு பகுதியில் 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு எங்கும் தடுப்பணை அமைக்கப்படவில்லை. எனவே, செங்கல்பட்டு பாலாற்றில் மெய்யூர்-பழவேலிக்கும் இடையே தடுப்பணை கட்டினால் சுற்றியுள்ள திம்மாவரம், ஆத்தூர், தேவனூர், பாலூர், காவூர், கரும்பாக்கம், வில்லியம்பாக்கம், தேவனூர், சாத்தணஞ்சேரி, மெய்யூர், பினாயூர், மாமண்டூர் என 50 கிராம விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதனால், பாலாற்றில் தடுப்பணை கட்டினால், விவசாயத்திற்கு மட்டுமல்லாமல் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது.

நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து மூன்று போகமும் விவசாயம் நடைபெறும்.அதேபோல், ஏக்கருக்கு 40 முதல் 45 மூட்டைகள் வரை நெல் அறுவடை செய்யலாம், என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர். செங்கல்பட்டு பாலாற்றில் தடுப்பணை இல்லாததால் ஒவ்வொரு ஆண்டும் மழைநீர் வெள்ளம் பாலாறு வழியாக சென்று வீணாக கடலில் கலக்கிறது. இதன் காரணமாக செங்கல்பட்டு பாலாறு வறண்டு காணப்படுகிறது. எனவே, செங்கல்பட்டு சுற்று வட்டார விவசாயிகளின் 50 ஆண்டுகால கோரிக்கையை ஏற்று செங்கல்பட்டு பாலாற்றில் தடுப்பணைகள் அமைக்க செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்ததுள்ளனர்

பாலாறு

குடிநீர் ஆதாரம்

பாலாற்றுக்கு மொத்தமாக ஏழு துணையாறுகள் உள்ளன. அவற்றில், செய்யாறு, பெண்ணை ஆறு ஆகியவை முதன்மையானவையாகும். வாணியம்பாடி, ஆம்பூர், பள்ளிகொண்டா, மேல்மொணவூர், வேலூர் ஆற்காடு, வாலாஜாபேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிவை இவ்வாற்றின் கரையில் அமைந்துள்ளன. இந்த பகுதிகளுக்கு விவசாயத்திற்கு மட்டும் அல்லாமல் பாலாறு குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது.

விவசாயிகளின் தாய் பாலாறு

தமிழ்நாட்டின் விவசாயிகளுக்கு பருவ மழையின்போது பாலாறு இரு கரைகளையும் தொட்டு கரைபுரண்டு ஓடும். இவ்வாறு ஓடும் பாலாறு கேடையின் போது ஒரு சிறிய ஓடைபோல் மாறி தண்ணீர் ஓடிக்கொண்டே இருக்கும்.

எந்த காலத்திலும் சிறிய அளவிலான தண்ணீராவது பாலாற்றில் ஓடிக்கொண்டே இருக்கும். இதனால், குழந்தையின் பசி அறிந்து தாய் பாலுட்டுவபோல், விவசாயிகளின் தேவையை அறிந்து எப்போதுமே பாலாறு தண்ணீர் வழங்கும் என்பதால் விவசாயிகளின் தாய் பாலாறு என கூறுவது குறிப்பிடத்தக்கது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விவசாயிகளின் தேவையறிந்து மெய்யூர்-பழவெளி பகுதியில் தடுப்பணை அமைக்க வேண்டும் என்பது ஒட்டு மொத்த மக்களின் விருப்பமாக உள்ளது.

விவசாயம் செழித்தோங்கும்

மெய்யூர் ஊராட்சி மன்ற தலைவர் தமிழரசன் கூறுகையில், ‘மெய்யூருக்கும், பழவேலிக்கும் இடையே பாலாற்றில் தடுப்பணை அமைத்தால் பழமதுரான் கால்வாய் மாமண்டூர், பழமத்தூர் ஆகிய கிராமங்களில் உள்ள நான்கு ஏரிகளுக்கு குளங்களுக்கும் தண்ணீர் செல்லும் வகையில் இந்த கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டமும் உயரும் விவசாயமும் செழித்தோங்கும்’ என்றார்.

பாலாறு நமக்கு கிடைத்த கொடை

பாலாறு ஓர் ஆறு மட்டுமல்ல, அது பெரிய நீர்த்தேக்கம். ஆற்றின் கீழ் மற்றொரு ஆறு ஓடுகிறது என்பார்கள். ஒரே நேரத்தில் கால்வாயாகவும், நீர்த்தேக்கமாகவும் விளங்கும் ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியா கால்வாய் நவீன தொழில் நுட்பத்தை கொண்டு உருவாக்கப்பட்டது. ஆனால், இதையே பாலாறு என்ற பெயரில் இயற்கை நமக்கு வடிவமைத்து கொடையாக வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related News