டிஎன்பிஎஸ்சி தேர்வில் முதலிடம் பிடித்தால் பரிசு தொகை?
பழநி, மே 19:தமிழக அரசு டிஎன்பிஎஸ்சி மூலம் குரூப் 1,2,3,4 தேர்வுகளையும், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் டிஇடி தேர்வையும், தமிழ்நாடு சீருடை பணியாளர் குழுமம் மூலம் காவலர் பணியிடங்களையும் நிரப்பி வருகிறது. இந்த தேர்வுகளை லட்சக்கணக்கான மாணவர்கள் எதிர்கொள்கின்றனர். கடந்த ஆண்டுகளில் குரூப் 4 தேர்வினை 20 லட்சம் பேர் எழுதினர். இந்த ஆண்டிற்கான குரூப் தேர்வுகளையும் லட்சக்கணக்கானோர் எதிர்கொள்கின்றனர்.
இந்த தேர்வுகளில் வெற்றி பெற மாணவர்கள் மிகவும் கடுமையாக உழைக்கின்றனர். தமிழ்நாடு அரசு முன்பு 10, 12ம் வகுப்புகளில் முதலிடம் பெறுபவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கும் முறையை அமல்படுத்தி வந்தது. அதுபோல் போட்டி தேர்வுகளில் முதலிடம் பெறும் மாணவர்களுக்கும் பரிசுத்தொகை வழங்க தமிழ்நாடு அரசு பரிசீலனை செய்ய வேண்டும். இதற்கு தேர்வாணையங்கள் நிதிநிலைகளை ஆராய்ந்து அரசுக்கு பரிந்துரைக்க வேண்டுமென தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.