திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோயிலில் திருக்கல்யாணம்
சீர்காழி, ஜூலை 9: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் புகழ் பெற்ற பிரம்ம வித்யாம்பிகை உடனுறை சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் நவகிரகங்களில் ஒன்றான புதன் தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாதித்து வருகிறார். இக்கோயிலில் அமைந்துள்ள சந்திரன், சூரியன், அக்னி ஆகிய முக்குளங்களில் புனித நீராடி சுவாமியை தரிசனம் செய்தால் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம்.பல்வேறு சிறப்புகளை பெற்ற கோயிலில் கும்பாபிஷேகம் 7 ம் தேதி நடைபெற்றது. தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு சுவாமி அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. அப்போது சிவாச்சாரியார்கள் சுவாமி அம்பாளுக்கு முறைப்படி திருமணம் செய்து வைத்தனர்.