குடிநீர் திட்ட பணி வெள்ளோட்டம்
ராசிபுரம், ஜூலை 9: ராசிபுரம் அருகே பட்டணம் பேரூராட்சி பகுதியில், புதிய குடிநீர் திட்டத்தின் வெள்ளோட்ட பணிகள் தொடங்கியது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பட்டணம் பேரூராட்சி பகுதியில், பேரூராட்சி நிர்வாகத்தினர் வார்டு வாரியாக குடிநீர் வழங்கி வருகின்றனர். இருந்தும் போதுமானதாக இல்லை என்பதனை அறிந்து, புதிய குடிநீர் திட்ட பணியும் பட்டணம் பேரூராட்சி இணைவு பெற்று உள்ளது. இதற்காக பட்டணம் பேரூராட்சி பகுதியில், குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. கட்டுமான பணிகள் முடிந்து, குடிநீர் குழாய் அமைக்கும் பணிகளும் நடந்து, தற்போது புதிய குடிநீர் திட்டத்தின் வெள்ளோட்ட பணிகள் நேற்று தொடங்கியது. இது வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. தொடர்ந்து வெள்ளோட்ட பணிகள் நடத்தி, இப்பகுதி மக்களின் பயன்பாட்டிற்கு, இன்னும் சில வாரங்களில் குடிநீர் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.