தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி வாக்குச்சாவடி மையங்களில் விறுவிறு வாக்குப்பதிவு: கலெக்டர், எம்பி, எம்எல்ஏ, மேயர் வாக்களித்தனர்

காஞ்சிபுரம், ஏப்.20: காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு நடைபெற்ற தேர்தலில், வாக்குச்சாவடி மையங்களில் கலெக்டர் கலைச்செல்வி மோகன், எம்பி செல்வம், எம்எல்ஏ எழிலரசன், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் ஆகியோர் வரிசையில் நின்று தங்களின் வாக்குகளை பதிவு செய்தனர். காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில், 6 சட்டமன்ற தொகுதியில் 1,932 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில், 372 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டு, கூடுதல் பாதுகாப்பு பேடப்பட்டன. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் எஸ்பி சண்முகம் தலைமையில் 9 ஏடிஎஸ்பிக்கள், 22 இன்ஸ்பெக்டர்கள், 170 சப் - இன்பெக்டர்கள், 670 போலீசார், 400 மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள், 350 ஓய்வுபெற்ற போலீசார் என மொத்தம் 1,621 பேர் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், மாவட்டம் முழுவதும் வாக்குபதிவு மையத்தில் 6800 அரசு ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டனர்.

Advertisement

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் 8,53,456 ஆண் வாக்காளர்களும், 8,95,107 பெண் வாக்களர்களும், 303 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 17,48,866 வாக்காளர்கள் உள்ளனர். அதன்படி, நேற்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில், காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் காலனியில் உள்ள இன்பனட் ஜீசஸ் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தேர்தல் வாக்குப்பதிவு மையத்தில், கலெக்டர் கலைச்செல்வி மோகன் வரிசையில் நின்று தனது வாக்கினை பதிவு செய்தார்.அதேபோல, காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட அத்திவாக்கம் ஊராட்சியில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல ஆரம்பப்பள்ளியில் வாக்குசாவடி எண்:326ல் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் க.செல்வம், தனது மனைவி லஷ்மிகாவுடன் தங்களின் வாக்கினை பதிவு செய்தார்.

காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் நகராட்சி நடுநிலைப்பள்ளியில், தேர்தல் வாக்குச்சாவடி மையத்தில் காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன், அவரது மனைவி கலைமகள், மகன்கள் ஆதித்யா, ஆதித்யன் ஆகியோர் தங்களது வாக்கினை பதிவு செய்தனர். காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், நாராயணர் குரு பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார். அதிமுக வேட்பாளர் பெரும்பாக்கம் ராஜசேகர், பரங்கிமலை ஒன்றியம் பெரும்பாக்கம் பாரதிய வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்தார். தொடர்ந்து பொதுமக்களும் அந்தந்த வாக்குச்சாவடிக்கை வரிசையில் நின்று தங்களின் வாக்குகளை செலுத்தினர்.

Advertisement