சாத்தூரில் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
சாத்தூர், ஜூலை 31: தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சாத்தூர் நகர் காவல் நிலைய எல்லைப்பகுதிகளில் பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொதுமக்கள் அதிகம் கூடும் பஸ்நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
சாத்தூர் ரயில் நிலையத்தில் காவல் உதவி செயலியின் பயன்பாடு குறித்து பெண்களிடையே விழிப்புணர்வு செய்யப்பட்டது. அப்போது பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள காவல் உதவி செயலியை பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்து அதன் பயன்பாடு குறித்து பள்ளி-கல்லூரி மாணவிகள் மற்றும் பணிக்கு செல்லும் பெண்களிடையே சாத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர்கள் செயல்முறை விளக்கம் அளித்தனர்.