வீட்டில் பதுக்கிய மது பறிமுதல்
ஏழாயிரம்பண்ணை, அக்.30: வெம்பக்கோட்டை அருகே சட்ட விரோதமாக மது விற்றவர் கைது செய்யப்பட்டார். வெம்பக்கோட்டை அருகே வெற்றிலையூரணி அம்பேத்கர் காலனி பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்து வருவதாக வெம்பக்கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
Advertisement
அதனைத் தொடர்ந்து வெம்பக்கோட்டை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் முருகேஸ்வரன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியில் உள்ள பாண்டி(34) என்பது வீட்டை சோதனை செய்தனர். அங்கு பதுக்கி வைத்திருந்த 38 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மது பாட்டில்களை விற்பனை செய்த பாண்டியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement