திமுகவினர் திரளாக பங்கேற்க நிதி அமைச்சர் அழைப்பு
காரியாபட்டி, ஆக.30: முன்னாள் திமுக சொத்து பாதுபாப்புக் குழு உறுப்பினர் காதர்பாட்ஷா (எ) வெள்ளைச் சாமி நினைவுதினம் நாளை கடைப்பிடிக்கப்படுகிறது. இது தொடர்பாக நிதிஅமைச்சர் தங்கம்தென்னரசு வெளியிட்ட அறிக்கை வருமாறு: ராமநாதபுரம் மாவட்ட திமுக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்ஷா முத்துராமலிங்கத்தின் தந்தையும், முன்னாள் திமுக சொத்து பாதுபாப்புக் குழு உறுப்பினருமான காதர்பாட்ஷா (எ) வெள்ளைச் சாமியின் 14ம் ஆண்டு நினைவு தினம் நாளை கடைப்பிடிக்கப்படுகிறது.
இதை முன்னிட்டு விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக சார்பாக நாளை காலை 10 மணியளவில் அவரது நினைவிடத்தில் மலரஞ்சலி செய்யப்பட உள்ளது. இதில் மாநில கழக நிர்வாகிகள், மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, ஒன்றிய, நகர, பேரூர், பகுதி மற்றும் வட்டக் கழகச் செயலாளர்கள், நிர்வகாகிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக முன்னோடிகள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.