விழிப்புணர்வு முகாம்
விருதுநகர், ஆக.30: விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கண்தான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கண் சிகிச்சை துறை சார்பில் 40வது தேசிய கண்தான விழிப்புணர்வு வார விழா நடைபெற்றது. இதனையொட்டி, மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பில் கண்தான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
கண்தானத்தின் அவசியம், கண்தானம் செய்தால் பிறருக்கு வெளிச்சம் தரலாம் என்பது குறித்த விழிப்புணர்வு நோயாளிகள், பொதுமக்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டது. பிரசுரங்கள் மற்றும் விளக்கக் குறிப்புகள் வழங்கப்பட்டது.
இதில், மருத்துவக்கல்லூரி முதல்வர் ஜெய்சிங், மருத்துவமனை கண்காணிப்பாளர் அரவிந்த் பாபு, உறைவிட மருத்துவ அலுவலர் ஸ்ரீதர், கண் சிகிச்சை துறை தலைவர் விஜய், செவிலியர் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க திட்ட மேலாளர் சந்திரலேகா, மருத்துவ மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.