சாலை பணியாளர் ஆர்ப்பாட்டம்
விருதுநகர், ஜூலை 30: விருதுநகர் நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன்பாக மாவட்ட தலைவர் குமார்பாண்டி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், சாலைப்பணயாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும். மேல்முறையீடு செய்யாமல் உயர்நீதிமன்ற ஆணையை அமல்படுத்த வேண்டும்.
சாலைப்பணியாளர்களின் உயர்நீத்தவர்களின் குடும்பத்தில் கருணை நியமனம் கோரி விண்ணப்பித்தவர்களுக்கு பணி வழங்க வேண்டும். மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை கலைத்திட வேண்டும். தனியார்மயப்படுத்தலை கைவிட வேண்டும். மாநில நெஞ்சாலைகளை தமிழக அரசே பராமரித்திட வேண்டும். கிராமப்புற இளைஞர்களுக்கு பணி வழங்க வேண்டும். சாலை பணியாளர்களுக்கு தொழில்நுட்ப கல்வித்திறன் பெறாததற்குரிய ஊதிய மாற்றம், தர ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.