பலத்த காற்றுடன் மழை மரம் சாய்ந்து மின்கம்பங்கள் சேதம்
Advertisement
ராஜபாளையம், அக்.29: ராஜபாளையத்தில் மழைக்கு மரம் சாய்ந்ததால் மின்கம்பங்கள் சேதமடைந்து மின்தடை ஏற்பட்டது.
ராஜபாளையம் தென்றல் நகர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு திடீரென பலத்த காற்றுடன் விடிய விடிய சாரல் மழை பெய்தது. இதில் பெரிய வேப்பமரம் ஒன்று வேருடன் சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதில் 4 மின்கம்பங்கள் ஒன்றோடு ஒன்று தொடர்ந்து சரிந்து விழுந்தன. இதுகுறித்து தகவல் கிடைத்தவுடன் மின்வாரியத்தினர் உடனடியாக மின் தொடர்பை துண்டித்தனர்.
ராஜபாளையம் நிலைய தீயணைப்பு நிலைய அலுவலர் செல்வ ரத்தினம் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மரத்தை வெட்டி அகற்றி மின் கம்பங்களை தூக்கி நிறுத்தி ஒரு மணி நேரத்தில் சரி செய்தனர்.
Advertisement