ஸ்ரீவில்லி வன பகுதியில் ஆண் யானை சாவு
ஸ்ரீவில்லிபுத்தூர், செப்.26: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வனப்பகுதியில் உடல்நல குறைவுடன் சுற்றி வந்த ஆண் யானை உயிரிழந்தது. ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட ராக்காச்சி அம்மன் கோவில் பகுதியில் நேற்று ஆண் யானை ஒன்று இறந்து கிடந்தது. இது பற்றி தகவல் கிடைத்தவுடன் வனத்துறையினர் விரைந்து சென்றனர். இறந்து கிடந்த யானையை பார்வையிட்டு அங்கேயே கால் நடைத்துறை மருத்துவரை கொண்டு பிரேத பரிசோதனை செய்தனர்.
இது குறித்து வனத்துறையினர் சிலர் கூறும் போது, ராக்காச்சி அம்மன் கோவில் பகுதியில் ஆண் யானை ஒன்று கடந்த சில தினங்களாக உடல் நல குறைவு காரணமாக சுற்றி திரிந்து கொண்டிருந்தது. அதனை தொடர்ச்சியாக கண்காணித்து வந்தோம். இந்த நிலையில் யானை இறந்துவிட்டது. அங்கேயே பிரேத பரிசோதனை செய்துள்ளோம் மற்றும் தந்தங்கள் மற்றும் பற்களை பறிமுதல் செய்யப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்படும் என தெரிவித்தனர்.