வெம்பக்கோட்டையில் பணி புறக்கணிப்பு போராட்டம்
ஏழாயிரம்பண்ணை, செப்.26: வெம்பக்கோட்டையில் வருவாய் துறையினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். உங்களுடன் ஸ்டாலின் திட்ட மனுக்களை விசாரிக்க போதிய கால அவகாசம் அளித்திட வேண்டும், ஆய்வு கூட்டம் என்ற பெயரில் அளவு கடந்த பணி நெருக்கடிகள் ஏற்படுவதை கைவிட வேண்டும், இத்திட்டத்தின் முகாம்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும்,
Advertisement
இத்திட்டத்தை செயல்படுத்த கூடுதல் பணியிடங்கள் மற்றும் அடிப்படைக் கூட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வெம்பக்கோட்டை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் வருவாய் துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள், கிராம உதவியாளர்கள், கிராம அலுவலர்கள், நில அளவை ஒன்றிப்பு ஊழியர்கள் இணைந்து வருவாய் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பணியை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Advertisement