இளம்பெண் மாயம்
சிவகாசி, அக்.24: சிவகாசி அருகே மாயமான இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். சிவகாசி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு திருமணம் முடிந்து இரண்டு பெண், ஒரு ஆண் குழந்தைகள் உள்ளனர். கணவர் கோயம்புத்தூரில் தங்கி வேலை பார்த்து வருகின்றார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
Advertisement
இதனால் குழந்தைகளை அழைத்துக் கொண்டு இளம்பெண் தனது தந்தை வீட்டிற்கு வந்துள்ளார். கடந்த 22ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற இளம்பெண் மீண்டும் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து புகாரின் பேரில் மாரனேரி போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
Advertisement