ஏழ்மை நிலையில் வாடும் மாணவருக்கு கல்வி உதவித்தொகை: அசோகன் எம்எல்ஏ வழங்கினார்
Advertisement
சிவகாசி, செப்.24: சிவகாசி பள்ளபட்டி தில்லை நகரில் ஏழ்மையில் வாடும் கல்லூரி மாணவருக்கு அசோகன் எம்எல்ஏ கல்வி உதவித்தொகை வழங்கினார்.
சிவகாசி சட்ட மன்ற தொகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள மாணவ, மாணவிகள் உயர்கல்வி பெற வேண்டும் என்பதற்காக ஏராளமான மாணவ, மாணவிகளுக்கு அசோகன் எம்எல்ஏ உதவி செய்து வருகின்றார். இந்நிலையில் சிவகாசி ஒன்றியம் பள்ளபட்டி ஊராட்சி தில்லைநகரில் ஏழ்மையில் வாடும் கல்லூரி மாணவன் துளசிராம் உயர் கல்விக்கு உதவித்தொகையை அசோகன் எம்எல்ஏ வழங்கினார். தனது தாயாருடன் வந்து உதவித்தொகையை மாணவர் பெற்றுக்கொண்டார். சிவகாசி நகர் எம்எல்ஏ அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் சிவகாசி வட்டார தலைவர் பைபாஸ் வைரகுமார் மற்றும் பலர் உடனிருந்தனர்.
Advertisement