கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் பயிர்க்கடன் வழங்குதல் தொடர்பான நெறிமுறைகள் கலந்தாய்வு கூட்டம்
விருதுநகர், ஆக.23: விருதுநகர் மாவட்டத்தில் பயிர்க்கடன் வழங்குதல் தொடர்பான நெறிமுறைகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டத்தில் பயிர்க்கடன் வழங்குதல் தொடர்பான நெறிமுறைகள் குறித்து விவசாய சங்க பிரதிநிதிகள், முன்னோடி விவசாயிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர்களுக்கு இடையேயான கலந்துரையாடல் கூட்டம் விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமையக கூட்ட அரங்கில் நடைபெற்றது. மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப்பதிவாளர், செயலாட்சியர் மரு.அ.ஜீவா தலைமை வகித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(விவசாயம்) அம்சவேணி, அருப்புக்கோட்டை சரக துணைப்பதிவாளர் அந்தோணி மரிய டயஸ், ஸ்ரீவில்லிபுத்தூர் சரக துணைப்பதிவாளர் வீரபாண்டி, விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் துணைப்பதிவாளர், முதன்மை வருவாய் அலுவலர் சிவக்குமார், விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் பொது மேலாளர் சரவணன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர்கள் மற்றும் கூட்டுறவுத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.