சிவகாசி அருகே அனுமதியின்றி எம்.சாண்ட் அள்ளி வந்தவர் கைது
சிவகாசி, நவ. 22: சிவகாசி அருகே டிராக்டரில் அனுமதியின்றி எம்.சாண்ட் அள்ளி வந்தவரை போலீசார் கைது செய்தனர். சிவகாசி அருகே எம்.துரைச்சாமிபுரம்- வேண்டுராயபுரம் சாலையில் மாரனேரி இன்ஸ்பெக்டர் முனியாண்டி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
Advertisement
அப்போது அந்த வழியாக எம்.சாண்ட் ஏற்றி வந்த டிராக்டரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது உரிய அனுமதியின்றி எம்.சாண்ட் அள்ளி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் டிராக்டரை ஓட்டி வந்த சரவணக்குமார் (37) என்பவரை கைது செய்தனர். மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.
Advertisement