ராஜபாளையத்தில் எல்ஐசி முகவர்கள் சங்கம் போராட்டம்
ராஜபாளையம், ஆக.22: ராஜபாளையத்தில் எல்ஐசி முகவர் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. ராஜபாளையம் எல்ஐசி கிளை அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி முகவர்களின் லிகாய் சங்கம் சார்பில் வாயிற்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கடந்த பேச்சுவார்த்தையில் உறுதி செய்யப்பட்ட 85 வயது வரை உள்ள முகவர்களுக்கு குழு காப்பீடு வழங்க வேண்டும்.
Advertisement
அனைத்து முகவர்களுக்கும் ரூ.2 லட்சம் வீதம் மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி வாயிற்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் முன்னாள் மத்திய கமிட்டி உறுப்பினர் வெங்கட் நாராயண ராஜா, கோட்ட தலைவர் சுப்பிரமணிய ராஜா, கிளைத்தலைவர் சுமதி, செயலாளர் கீதா, பொருளாளர் ஆனந்த் மற்றும் முகவர்கள் கலந்து கொண்டனர்.
Advertisement