காத்திருப்பு போராட்டம்
விருதுநகர், ஆக. 21: விருதுநகர் அரசு போக்குவரத்து பணிமனை முன்பு சிஐடியு, போக்குவரத்து ஊழியர்கள் ஓய்வூதியர்கள் சங்கத்தினர் 3வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சிஐடியூ விருதுநகர் மண்டல தலைவர் திருப்பதி தலைமை வகித்தார். இதில், பழைய ஓய்வூதிய திட்டத்தை வழங்க வேண்டும்.
Advertisement
உயிரிழந்த தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு கல்வி தகுதி அடிப்படையில் வாரிசு வேலை வழங்க வேண்டும், 25 மாதங்களாக வழங்க வேண்டிய ஓய்வூதியர்களின் நிலுவைகளை உடனே வழங்க வேண்டும், ஓய்வூதியர்களுக்கு மருத்துவக்காப்பீடு, ஒப்பந்த உயர்வு, குறைந்தபட்ச பென்சன் உயர்வு மற்றும் அகவிலைப்படி உயர்வுகளை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
Advertisement