அல்லாளபேரியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்
காரியாபட்டி, ஆக.20: அல்லாளபேரியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. காரியாபட்டி ஒன்றிய அளவிலான உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் அல்லாளபேரி கிராமத்தில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் சுகபுத்ரா முகாமினை தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முகாமில் கலைஞர் மகளிர் உரிமை தொகை, முதியோர் பென்ஷன், பட்டா மாறுதல், கலைஞர் கனவு இல்லம் திட்டம், மகளிர் சுய உதவிக் குழு கடன் உதவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து ஏராளமான பொது மக்களிடம் மனுக்கள் பெறப்பட்டது.
வருவாய் துறை, சமூக நலத் துறை, மருத்துவ துறை, ஊரக வளர்ச்சி துறை, வேளாண்மை துறை மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் பங்கேற்றனர். பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. முகாமில் தாசில்தார் மாரீஸ்வரன், மாவட்ட கவுன்சிலர் தங்கதமிழ்வாணன் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.