சாத்தூரில் சாலையில் குப்பைகள் குவிப்பு: சுகாதாரம் பாதிப்பு
சாத்தூர், செப்.19: சாத்தூர் பகுதியில் குப்பைகளை கொட்டும் வகையில் தொட்டி வைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சாத்தூர் நகர் பகுதியில் வணிக நிறுவனங்களில் இருந்து வெளியேறும் குப்பைகளை நிறுவனத்தின் வாசல் முன்பு குவித்து வைத்துள்ளனர். நகராட்சி தூய்மை பணியாளர்கள் அதிகாலையில் இருந்து ஒவ்வொரு பகுதியாக குப்பைகளை சேகரித்து வருகின்றனர்.
Advertisement
சில பகுதிக்கு செல்வதற்கு காலதாமதம் ஆவதால் அந்த பகுதியில் உள்ள வணிக நிறுவனங்கள் முன்பு குவித்து வைத்திருக்கும் குப்பைகளை, உணவு தேடி வரும் கால்நடைகள் சாலையில் பரப்பி விடுகின்றன. இதனால் சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. கால்நடைகளுக்கும் கழிவுகளிலிருந்து நோய்த் தொற்றும் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே ஆங்காங்கே குவியலாக இருக்கும் குப்பைகளை தொட்டி வைத்து முறையாக அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
Advertisement