ராஜபாளையத்தில் சிஐடியு சங்கம் ஆர்ப்பாட்டம்
Advertisement
ராஜபாளையம், ஆக.19: சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக ராஜபாளையத்தில் சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ராஜபாளையம் சிஐடியு இணைப்பு சங்கங்கள் சார்பாக ஜவகர் மைதானத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு டாக்ஸி வேன் தொழிற்சங்கம் தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். சிஐடியு கணேசன், விசைத்தறி சங்க மாநில தலைவர் சோமசுந்தரம், டாக்ஸி சங்கத் தலைவர் விஜயகுமார், மாதர் சங்கம் சார்பில் மைதிலி, மாரியப்பன், கூட்டுறவு பண்டக சாலை தொழிற்சங்க தலைவர் முனியாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சிஐடியு மாவட்ட தலைவர் மகாலட்சுமி நிறைவுரையாற்றினார். ஏராளமான சிஐடியு தொண்டர்கள் பங்கேற்று கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
Advertisement