90 மது பாட்டில்கள் பறிமுதல்
Advertisement
ஏழாயிரம்பண்ணை, ஆக.19: வெம்பக்கோட்டை அருகே கோட்டையூர் பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்து வருவதாக வெம்பக்கோட்டை போலீசார் மற்றும் சாத்தூர் மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து வெம்பக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் நம்பிராஜன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தாயில்பட்டி, கோட்டையூர் பஸ் நிறுத்தம் அருகே சந்தேகத்திற்கு இடமான அடிப்படையில் நின்று கொண்டிருந்த நபரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. அவரிடமிருந்து 90 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் மது பாட்டில்களை விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த முத்துராஜ் (45) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement