அரசு பஸ் டிரைவர் மீது தாக்குதல்
விருதுநகர், அக்.18: விருதுநகரில் அரசு பஸ் டிரைவரை தாக்கிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மல்லாங்கிணரை சேர்ந்த அய்யாசாமி (54), அரசு பேருந்தில் டிரைவராக உள்ளார். நேற்று சிவகாசியில் இருந்து விருதுநகர் நோக்கி பஸ்சை ஓட்டி வந்தார். அப்போது, ஆனைக்குட்டம் பஸ் ஸ்டாப்பில் பயணிகளை ஏற்றியுள்ளார்.
Advertisement
சிவகாசி வடமலாபுரத்தை சேர்ந்த விநாயகமூர்த்தி (43) என்பவர் டிரைவர் அய்யாசாமியை திட்டி வாக்குவாதம் செய்தார். பஸ் ஸ்டாண்டில் நிறுத்த மாட்டீயா என கேட்டு டிரைவரின் நெஞ்சில் மிதித்ததாக கூறப்படுகிறது. காயமடைந்த டிரைவர் விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆமத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Advertisement