சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு
காரியாபட்டி, செப்.18: காரியாபட்டியில் பெரியார் பிறந்தநாள் நிகழ்ச்சி நடை பெற்றது. தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பெரியார் பிறந்தநாளான செப்.17ம் தேதி சமூகநீதி நாளாக கடைபிடிக்கப்படுகிறது. காரியாபட்டி கல்குறிச்சி சமத்துவபுரத்தில் உள்ள பெரியார் சிலைக்கு காரியாபட்டி தி.மு.க. சார்பில் ஒன்றிய செயலாளர் கண்ணன், மாவட்ட கவுன்சிலர் தங்க தமிழ்வாணன், ஒன்றியக்குழு முன்னாள் துணைத் தலைவர் ராஜேந்திரன், ஒன்றிய துணை செயலாளர் குருசாமி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சேகர், இளைஞர் அணி அமைப்பாளர் முத்துக்குமார், கணேசன், செந்தில், கந்தசாமி உள்ளிட்டோர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அதன் பிறகு தி.மு.க நிர்வாகிகள், பொதுமக்கள் அனைவரும் சமூகநீதி நாள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
Advertisement
Advertisement