ஆவியூர் குப்பை கிடங்குகளில் மருத்துவ கழிவுகள் கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: ஊராட்சி நிர்வாகம் எச்சரிக்கை
காரியாபட்டி, அக்.17: ஆவியூரில் மருத்துவ கழிவுகளை கொட்டுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஊராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது. காரியாபட்டி அருகே ஆவியூர்-அரசகுளம் செல்லும் பாதையில் கடந்த சில நாட்களாக மருத்துவ கழிவு பொருட்கள் கொட்டப்பட்டு கிடந்தது.
Advertisement
இதனால் பொது சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் அபாயம் நிலவியது. இது குறித்து பொது மக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் குப்பை கிடங்கில் கிடந்த மருத்துவ கழிவுகளை ஊராட்சி நிர்வாகம் உடனடியாக அப்புறப்படுத்தியது.மேலும் மருத்துவ கழிவுகளை கொட்டுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஊராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
Advertisement