ஆக. 22ல் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
விருதுநகர், ஆக. 14: விருதுநகர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆக. 22ம் தேதி நடைபெறும் என கலெக்டர் சுகபுத்ரா அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்: விருதுநகர் மாவட்ட ஆட்சியரக மக்கள் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஆக. 22ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. எனவே, விவசாயிகள் கலந்து கொண்டு விவசாயம் தொடர்பான கோரிக்கைகளை நேரடியாக மனு மூலம் தெரிவித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.