அனைத்து தொழிற்சங்கத்தினர் ஒன்றிய பாஜ அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
விருதுநகர், ஆக. 14: பொதுத்துறைகளை தனியாருக்கு தாரை வார்க்கும் ஒன்றிய பாஜ அரசைக் கண்டித்து அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஒன்றிய மோடி அரசு இந்திய -இங்கிலாந்து வர்த்தக ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும், அமெரிக்காவின் மிரட்டலுக்கு அடிபணியக் கூடாது, பொதுதுறைகளையும், பொது சேவைகளையும் தனியாரிடம் தாரை வார்க்க கூடாது,
என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் பழைய பேருந்து நிலையம், அண்ணா சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொமுச பொதுச்செயலாளர் ராஜசெல்வம் தலைமை வகித்தார். சிஐடியூ மாவட்டச் செயலாளர் தேவா வாழ்த்தி பேசினார். ஏஐடியுசி மாவட்டத் தலைவர் சமுத்திரம் முன்னிலை வகித்தார். நிறைவில், யூடிசி மாவட்டத் தலைவர் பாலசுப்பிரமணியன் பேசினார்.