சமூக தணிக்கை கிராம சபை கூட்டம்
சிவகாசி, ஆக.13: சிவகாசி ஊராட்சி ஒன்றியம் எம்.புதுப்பட்டி ஊராட்சியில் 2024-25ம் நிதியாண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் குறித்த சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. மூத்த குடிமகன் சீனிவாசன் தலைமை வகித்தார். தனி அலுவலரும் வட்டார வளர்ச்சி அலுவலருமான மீனாட்சி முன்னிலை வகித்தார். இத்திட்டம் குறித்தும் சமூக தணிக்கையின் நோக்கம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
சமூக தணிக்கை வட்டார வள அலுவலர் ரமேஷ் தலைமையிலான அமுதா, கனகலட்சுமி, கனகாபரணி குழுவினர் தணிக்கை மேற்கொண்டனர். பற்றாளராக ஒன்றிய பணி மேற்பார்வையாளர் பானு கலந்து கொண்டார். திட்டப் பயனாளிகள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். பயனாளிகளின் கோரிக்கை பெறப்பட்டு புதிய வேலை அட்டை வழங்கப்பட்டது. முடிவில் ஊராட்சி செயலர் கண்ணன் நன்றி கூறினார்.