மதுபான கடைகள் ஆக.15ல் அடைப்பு
விருதுநகர், ஆக.13: விருதுநகர் மாவட்டத்தில் ஆக.15ல் மதுபான கடைகள் அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் கலெக்டர் வெளியிட்ட தகவல்: விருதுநகர் மாவட்டத்தில் செயல்படும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள், எப்எல் 1, 2,3, 3ஏ, 3ஏஏ மற்றும் எப்எல் 11 மதுபான உரிமஸ்தலங்களை ஆக.15 சுதந்திர தினத்தில் தற்காலிகமாக மூட வேண்டும். மீறி செயல்படும் மதுபான கடைகள், மதுபான உரிமஸ்தலங்களின் உரிமதாரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.