வெம்பக்கோட்டையில் 2 மணிநேரம் கனமழை
ஏழாயிரம்பண்ணை, செப்.10: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் வாட்டி வதைத்தது. நேற்று மதியம் முதல் மேக மூட்டத்துடன் இருந்த வந்த நிலையில் திடீரென கருமேகங்கள் சூழந்து வெம்பக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை இரண்டு மணி நேரத்துக்கு மேலாக பெய்தது.
Advertisement
இதனால் சாலைகளில் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் அவதி அடைந்தனர். திடீரென பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மழையால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெம்பக்கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது.
Advertisement