தோட்டத்தில் பட்டாசு தயாரித்த இருவர் கைது
விருதுநகர், செப்.10:விருதுநகர் அருகே இனாம் ரெட்டியபட்டியை சேர்ந்தவர் மாணிக்கம்(47). காரிசேரியை சேர்ந்தவர் கருப்புசாமி(45). இருவரும் வாய்ப்பூட்டான்பட்டியை சேர்ந்த யுவராஜ் என்பவருக்கு சொந்தமான தோட்டத்து அறையில் சட்டவிரோதமாக தீபாவளியை முன்னிட்டு பேன்சி ரக பட்டாசுகளை தயாரித்து வந்துள்ளனர்.
Advertisement
தினசரி பட்டாசு தயாரிக்க பயன்படும் மணி மருந்து மற்றும் பொருட்களைக் கொண்டு வந்து பேன்சி ரக பட்டாசுகளை தயாரித்து எடுத்துச் சென்று விற்பனை செய்து வந்துள்ளனர். இது தொடர்பாக தகவல் அறிந்த தீப்பெட்டி, தொழில் ஆய்வு தனி தாசில்தார் திருப்பதி தலைமையிலான அலுவலர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர். அங்கு தயாரித்த பட்டாசுகளை பறிமுதல் செய்து மணி மருந்து உள்ளிட்ட மூலப்பொருட்களை அழித்தனர். மாணிக்கம், கருப்பசாமியை கைது செய்தனர்.
Advertisement