கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
விருதுநகர், செப்.9: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் டாஸ்மாக் ஊழியர்கள், பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் சங்க மாவட்டத் தலைவர் பாலமுருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், காலி மதுபாட்டில்கள் திரும்ப பெறும் திட்டத்தால் ஊழியர்களுக்கு ஏற்படும் பணிச்சுமையை கருத்திற்கொண்டு மாற்றுத்திட்டம் உருவாக்க வேண்டும்.
டாஸ்மாக் ஊழியர்களுக்கு நீதிமன்றங்கள் வழங்கிய பணிநிரந்தர தீர்ப்பு உத்தரவுகளை மேல்முறையீடு செய்யாமல் நிரந்தரப்படுத்த வேண்டும். டாஸ்மாக் ஊழியர்களுக்கு 40 சதவீத தீபாவளி போனஸ் வழங்க வேண்டும். இஎஸ்ஐ மருத்துவ திட்டத்தை அமுல்படுத்த வேண்டுமென்பது உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் டாஸ்மாக் ஊழியர் சங்கம் மற்றும் சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.