விருதுநகரில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி
விருதுநகர், அக். 8: விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சார்பில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு மனித சங்கிலி ஊர்வலம் நேற்று நடைபெற்றது. மருத்துவக்கல்லூரி முதல்வர் ஜெயசிங் தலைமை வகித்து பேசுகையில், ‘விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மார்பக புற்றுநோய் அறுவை சிகிச்சை, மோமோகிராம் போன்ற நவீன முன் பரிசோதனைகள் சிறப்பாக மேற்கொள்ளப்படுகிறது.
மார்பக புற்றுநோய்க்கான முன்பரிசோதனைகள் மற்றும் அதற்கான அனைத்து சிகிச்சைகளும் வழங்கப்படுகிறது’ என்றார். மேலும் தாய்ப்பாலின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைத்தார். இந்நிகழ்ச்சியில் மருத்துவமனை கண்காணிப்பாளர் அரவிந்த் பாபு, துணை கண்காணிப்பாளர் அன்புவேல், உதவி நிலைய மருத்துவர் வரதீஸ்வரி மற்றும் துறை தலைவர்கள், மருத்துவர்கள், செவிலிய கண்காணிப்பாளர்கள், செவிலியர்கள், செவிலிய மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.