ஆர்ப்பாட்டம்
Advertisement
விருதுநகர், டிச. 7: விருதுநகர் பழைய பஸ் நிலையம் அருகே தமுமுக மேற்கு மாவட்ட தலைவர் பஷீர் அஹமது தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஜனநாயக படுகொலைக்கு வழிவகுக்கும் அவசரமான சிறப்பு வாக்காளர் பட்டியல் சீராய்வு பணியை கைவிட வேண்டும். வக்பு திருத்த சட்டம் 2025 என்ற வழிப்பறி கொள்ளை திட்டத்தை திரும்ப பெற வேண்டும். வழிபாட்டு தலங்கள் சட்டம் 1991ஐ முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் திமுக நகர செயலாளர் தனபாலன், சிபிஎம் மாவட்ட செயலாளர் குருசாமி, சிபிஐ மாவட்ட செயலாளர் செந்தில்குமார் மற்றும் காங், மதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Advertisement