சாலையில் விழுந்த மரம் அகற்றம்
ஸ்ரீவில்லிபுத்தூர், ஆக.7: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள செண்பகத்தோப்பு பகுதியில் நேற்று முன்தினம் வீசிய சூறைகாற்றினால் செண்பகத்தோப்பு செல்லும் சாலையில் உள்ள பழமையான வாகைமரத்தின் ஒரு பகுதி கீழே உடைந்து விழுந்தது. விழும்போது யாரும் இல்லாததால் எவ்வித ஆபத்து ஏற்படவில்லை.
Advertisement
இது பற்றிய தகவல் கிடைத்தவுடன் ஸ்ரீவில்லிபுத்தூர் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் ரவி, ஏஇ பொன் முரளி உத்தரவின் பேரில் அலுவலர் வனராஜ் தலைமையில் நெடுஞ்சாலை துறையினர் விரைந்து சென்று மரத்தை இயந்திரங்கள் மூலம் அறுத்து அப்புறப்படுத்தினர்.
Advertisement