ஆக.12ல் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
விருதுநகர், ஆக.6: விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, அருப்புக்கோட்டை, சாத்தூர் கோட்டங்களில் ஆக.12 காலை 11 மணியளவில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும்நாள் கூட்டம் கோட்டாட்சியர்கள் தலைமையில் நடைபெற உள்ளது. விவசாயிகள் கலந்து கொண்டு விவசாயம் தொடர்பான கோரிக்கை மனுக்களை அளித்து தீர்வு காணலாம் என கலெக்டர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement