மனைவி தலையில் கத்தியால் குத்திய கணவன் கைது
விருதுநகர், ஆக.6விருதுநகர் பாரதி நகரை சேர்ந்தவர் கார்த்திக்(38). இவரது மனைவி அபிராமி(32). 14 வயதில் மகன் இருக்கிறார். கார்த்திக்கிற்கு வெளிநபர்களுடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கார்த்திக் சென்னை சென்று நேற்று முன்தினம் ஊருக்கு திரும்பி வந்துள்ளார். வந்தவர் மனைவியிடம் கடுமையாக வாக்குவாதம் செய்துள்ளார்.
அபிராமி திங்கட்கிழமை மவுனவிரதம் இருந்தால் கணவனிடம் பதில் பேசாமல் இருந்துள்ளார். இதைத்தொடர்ந்து மனைவி அபிராமியை அவதூறாக பேசி கத்தியால் தலையில் குத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். படுகாயம் அடைந்த அபிராமி விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். மேற்கு போலீசில் அபிராமி அளித்த புகாரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்து சிறையில் அடைத்தனர்.