வில்லிபுத்தூரில் சிபிஎம் கட்சியினர் போராட்டம்
வில்லிபுத்தூர், ஆக.5: வில்லிபுத்தூரில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வில்லிபுத்தூர் ஒன்றியம் பூவாணி ஊராட்சிக்குட்பட்ட அருந்ததியர் காலனி பகுதியில் வசித்து வரும் மக்களுக்கு பல்வேறு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரக்கோரி வில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி சின்னத்தம்பி தலைமையில் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.