ஆலோசனை கூட்டம்
சாத்தூர், ஆக.5: சாத்தூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில், இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடி கடைசி வெள்ளி திருவிழா ஆக.15ல் நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம், கோட்டாச்சியர் கனகராஜ் தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் கோயில் நிர்வாகத்தினர், இருக்கன்குடி ஊராட்சி தனி அலுவலர், வருவாய் துறையினர், காவல் துறையினர், இருக்கன்குடி, நத்தத்துப்பட்டி, என்.மேட்டுப்பட்டி, கே.மேட்டுப்பட்டி பகுதி மக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.