குவாரி உரிமையாளர் மீது தாக்குதல்
திருச்சுழி, அக்.4: திருச்சுழி அருகே குவாரி உரிமையாளர் மற்றும் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்திய 25க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருச்சுழி அருகே பண்ணை மூன்றடைப்பு பகுதியில் மதுரை மாவட்டம் வளையங்குளத்தை சேர்ந்த முருகன்(35) என்பவரும், அதே பகுதியில் திருநெல்வேலியை சேர்ந்த மயில்வாகனன் என்பவரும் குவாரி நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
மேலும் தொழில் போட்டியின் காரணமாக இருவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு முருகனுக்கு சொந்தமான குவாரியில் மயில்வாகனன் தரப்பைச் சேர்ந்த சுமார் 25க்கும் மேற்பட்டோர் அத்துமீறி நுழைந்தனர்.
அங்கிருந்த முருகன், வேலை செய்து வரும் மணிகண்டன் ஆகியோரை தாக்கி, குவாரி வளாகத்தில் இருந்த வாகனங்களையும் அடித்து நொறுக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து முருகன் அளித்த புகாரின் பேரில், மயில்வாகனன் உள்பட 25க்கும் மேற்பட்டோர் மீது திருச்சுழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.