சாலை விபத்தில் 3 வாலிபர்கள் உட்பட 4 பேர் படுகாயம்
சிவகாசி, நவ.1: சிவகாசி அருகே சாலை விபத்தில் 3 வாலிபர்கள் உள்பட 4 பேர் படுகாயமடைந்தனர். சிவகாசி அருகே சிவகாமிபுரம் காலனியை சேர்ந்த புவனேஸ்வரன் (25) என்ற வாலிபர் தனது டூவீலரில் அதே பகுதியை சேர்ந்த ஈஸ்வரன் (26) என்பவருடன் எம்.புதுபட்டி ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது நமஸ்கரித்தான்பட்டி அருகே எரிச்சநத்தம் கிராமத்தை சேர்ந்த நாகராஜா (35) என்பவர் ஓட்டி வந்த டூவீலர் புவனேஸ்வரன் டூவீலர் மீது மோதியது.
இதில் மூவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அங்கிருந்தவர்கள் 3 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புவனேஸ்வரன் கொடுத்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீசார் நாகராஜா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதே போல் சிவகாசி அருகே முத்துராமலிங்கபுரம் காலனியை சேர்ந்தவர் லட்சுமி(55).
இவர் சம்பவத்தன்று பள்ளப்பட்டி ரோட்டில் பால் வாங்கி கொண்டு நடந்து வந்து கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலத்த காயம் அடைந்தார். சிவகாசி அரசு மருத்துவமனையில் மூதாட்டிக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக விருதுநகர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.