அக்.5, 6ம் தேதிகளில் ரேஷன் பொருட்கள் வீடுதேடி வழங்கப்படும்
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் அக்.5 மற்றும் 6ம் தேதி வீட்டிற்கே சென்று குடிமைப்பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் அக்.5 மற்றும் 6ம் தேதி 70 வயதுக்கு மேல் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் மாற்றுத்திறானளிகளின் வீட்டிற்கே சென்று குடிமைப்பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது.
Advertisement
மேலும் இனிவரும் மாதங்களிலும் மாதத்தின் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மேற்படி திட்டப் பயனாளிகளுக்கு அவரவர் இல்லங்களுக்கே நேரில் வந்து குடிமைப்பொருட்கள் விநியோகம் செய்யப்படும். தகுதியுடைய குடும்ப அட்டைதாரர்கள் மேற்கண்ட திட்டத்தினை பயன்படுத்தி பயனடையுமாறு விருதுநகர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
Advertisement