நாளை டாஸ்மாக் விடுமுறை
விருதுநகர்: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாளை டாஸ்மாக் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட தகவல்: காந்தி ஜெயந்தி தினமான நாளை (அக்.2) டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் எப்.எல் 1, 2, 3 மற்றும் 11 ஆகிய மதுபான உரிம ஸ்தலங்களை தற்காலிகமாக மூட வேண்டும். உத்தரவை மீறி செயல்படும் டாஸ்மாக் கடைகள், பார்களின் உரிமதாரர்களின் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement