மருது சகோதரர்கள் படத்திற்கு காங்கிரஸ் சார்பில் மரியாதை
சாத்தூர், அக்.25: சாத்தூரில் மருது சகோதரர்கள் படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது.இந்திய சுதந்திர போராட்ட வீரர்கள், மாமன்னர்கள் மருது சகோதரர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு முக்குராந்தல் பகுதியில் சாத்தூர் நகர வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பாக நகர தலைவர் அய்யப்பன் தலைமையில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அசோகன், சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ரகுராமன், சாத்தூர் சட்டமன்றத் தொகுதி அமைப்பாளர் ஜோதி நிவாஸ் ஆகியோர் மருது சகோதரர்கள் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.
Advertisement
Advertisement