கார்த்திகை மாதம் பிறந்ததையொட்டி ஐயப்ப, முருக பக்தர்கள் விரதம் துவக்கம்
விருதுநகர், நவ.18: கார்த்திகை மாதம் பிறந்ததையொட்டி மாலை போட்டு 48 நாள்கள் விரதம் இருந்து மண்டல மற்றும் மகர பூஜைக்கு சபரிமலை செல்வது ஐயப்ப பக்தர்களின் வழக்கம். நேற்று கார்த்திகை 1 ம் தேதி பிறந்ததையொட்டி ஐயப்ப பக்தர்கள் தங்கள் குருசாமிகளிடம் சரணகோஷம் முழங்க மாலை அணிந்து கொண்டனர். இதே போல், முருக பக்தர்களும் மாலை அணிந்து கொண்டனர். விருதுநகர் வாலசுப்பிரமணியசுவாமி கோயில், சொக்கநாதர் கோயில் உள்ளிட்ட கோயில்களில் ஐய்யப்ப மற்றும் முருக பக்தர்கள் மாலை அணிந்து தங்கள் விரதத்தை துவக்கினர். ஐயப்ப சீசன் தொடங்கியுள்ளதைத் தொடர்ந்து அது தொடர்பான வியாபாரமும் சூடு பிடித்துள்ளது. சந்தன மாலை, ஸ்படிக மாலை, ருத்ராட்ச மாலை, துளசி மாலை, செந்துளசி மாலைகள், ஐயப்பன் மற்றும் முருகன் சாமி படங்கள் மற்றும் அணிகலன்கள் விற்பனை சூடுபிடித்துள்ளது.
அதேபோன்று, வத்திராயிருப்பு அருகே தாணிப்பாறையில் ஆசிர்வாத விநாயகர் கோயிலில் கார்த்தியை 1ம் தேதி முன்னிட்டு ஐயப்பன் கோயிலுக்கு பக்தர்கள் மாலை அணிவித்தனர். மேலும், காரியாபட்டி பாண்டியன் நகர் மாரியம்மன் கோயிலில் சபரிமலை ஐயப்பன் மற்றும் முருகனுக்கு மாலை அணிவித்து விரதத்தை பக்தர்கள் தொடங்கினர். ராஜபாளையம்: ராஜபாளையம் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள அய்யனார் கோயில், புதூர் ஐயப்பன் கோயில் மற்றும் பல்வேறு விநாயகர் கோயிலில் ஐயப்ப பக்தர்கள், சபரிமலை ஐயப்பன் கோயிவிலுக்கு மண்டலை மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு செல்வதற்கு தங்களுடைய குருநாதர்கள் கையால் மாலை அணிவித்து தங்களுடைய விரதத்தை தொடங்கினர்.