திருச்சுழியில் 69.40 மிமீ மழை பதிவு
Advertisement
விருதுநகர், அக்.13: விருதுநகர் மாவட்டதில் கடந்த சில மாதங்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வந்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக மாவட்டத்தின் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் மாவட்டத்தின் பல இடங்களில் பலத்த மழை பெய்தது. விருதுநகரில் பெய்த பலத்த மழையால் பழைய பஸ் நிலைய சுற்றுப்பகுதி, ரயில்வே பீடர் ரோடு, சாத்தூர் ரோடு, தர்காஸ் தெரு உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது.
விருதுநகர் மாவட்டத்தில் அதிகபட்சமாக திருச்சுழியில் அதிகபட்சமாக 69.40 மிமீ மழை பெய்துள்ளது. மேலும் விருதுநகரில் 47 மிமீ மழையும், கோவிலாங்குளத்தில் 42 மிமீ மழையும், அருப்புக்கோட்டையில் 25 மிமீ மழையும், காரியாபட்டியில் 21.50 மிமீ மழையும், சிவகாசியில் 8 மிமீ மழையும், வத்திராயிருப்பில் 7.80 மிமீ மழையும் பதிவாகியுள்ளது.
Advertisement