கிணற்றில் மிதந்த பெண் உடல்
சாத்தூர், நவ.11: சாத்தூர் அருகே கிணற்றில் பெண் சடலம் மிதந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர் கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சாத்தூர் அருகே உப்புத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பின்புறம் உள்ள பயன்பாடு இல்லாத கிணற்றில்பெண் உடல் மிதப்பதாக நேற்று முன்தினம் உப்புத்தூர் கிராம நிர்வாக அலுவலர் ஜெயக்குமாருக்கு தகவல் கிடைத்தது. சாத்தூர் தாலுகா காவல் நிலையத்தில் அவர் கொடுத்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தீயணைப்பு துறையினர் கிணற்றில் தண்ணீரில் அழுகிய நிலையில் மிதந்த பெண் உடலை கைப்பற்றினர். இறந்த பெண்ணுக்கு 50 வயது இருக்கும் என்றும் யாராவது கொலை செய்து கிணற்றில் வீசி சென்றார்களா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என தாலுகா போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Advertisement
Advertisement